வாசி யோகத்தை பற்றி திருமூலர் சொன்ன குறிப்பு ஒன்றைஇங்கு காண்போம்,
“ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே”
என்பது திருமூலரின் திருமந்திரம்
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள:
ஆரி: என்பதற்கு கதவு என்று பொருள் உள்ளது. அதாவது கதவே இல்லாத திறந்த வாயில் போன்று விளங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் இரண்டு நாசி துவாரங்கள் வழியே, குதிரைகளைப் போன்று, உள்மூச்சும், வெளிமூச்சும் நாம் அறியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறது…
அதை வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை: விரகன்: என்பதற்கு திறமையானவன் என்று பொருள்.வீசி பிடிக்கும் திறமையானவன் இல்லாததால், கட்டுக்கடங்காமல் மாறி மாறி ஒவ்வொரு உடம்பின் உள்ளுக்குள்ளும், விரும்பும்போது போய்கொண்டும், வெளியில் வந்து கொண்டுமாக இருக்கிறது…
அதற்கு கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்: கூரி: என்பதற்கு புத்தி கூர்மை உள்ளவன் என்று பொருள்.புத்தி கூர்மை நிறைந்த ஸத்குருவின் அருளை ஒருவன் பெற்று, தன்னுடைய உள் மற்றும் வெளி மூச்சுக்களை…
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே: வாரி: என்பதற்கு முறையாக என்று பொருள் உள்ளது. முறையாக பிடித்தால் இவ்விரண்டும் அவர்கள் வசப்படும். அவ்வாறு கட்டுக்குள் வசப்பட்ட குதிரைகள் என்னும் பிராணங்கள் இரண்டும் லயம் அடைந்து, பின்பு (லாயம் என்றால் குதிரைகளை கட்டும் இடம்) லாயம் என்னும் இத் தேகத்தை விட்டு வேறு எங்கும் வெளி செல்லாது.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
