“முயற்சி திருவினையாக்கும்”
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”. குறள்:620
மெய்ப்பொருள்:
‘ஊழ்’ என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல் வடிவமானது, அதற்கென்று உரிய காலகட்டத்தில், ஒவ்வொருவரின் மனக்கண் முன்னே வந்து நிற்கும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அச்செயல்பாடானது அதற்குரியவர்கள் மூலம் நடைபெற்றே தீரும். எனினும் ஊழின் அச்செயல் வடிவத்தில் ஒருபுறம் நல்ல பலனும் மறுபுறம் தீயபலனும் கலந்தே காணப்படும்.
எவரொருவர் தம் வாழ்வில் எச்செயலையும் சோர்வின்றி, காலம் தாழ்த்தாது அதாவது நாளை செய்து கொள்ளலாம் என்று எண்ணமின்றி தன்னம்பிக்கையோடு முயல்கிறார்களோ…
அத்தகையோரை ஊழானது செயல் வடிவம் தாங்கி அதற்குரிய காலகட்டத்தில் நெருங்கி வரும் போது, அவர்கள் ஊழின் உப்பக்கத்தையும் அதாவது அதன் மறுபுறத்தையும் காணும் திறன் கொண்டவர்களாகி,
அவ்-விதியின் நல்ல பலன்களை தனதாக்கி கொண்டு, தீய பலன்களை புறம் தள்ளிவிடுவார்கள்.
வாழ்க தமிழ்🙏 வாழ்க வள்ளுவம்🙏

.jpeg)
