You Are That! – “unchangeable name posser”

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
திருமூலரின் திருமந்திரம்:145
விளக்கவுரை :
எந்த மனித உருவை அது பிறந்த போது அதை அழைப்பதற்காக, இறைவனின் திருநாமங்களில் ஒன்றினையே தேர்ந்தெடுத்து, அஃதினையே பிறந்த அம்மனித உருவின் பெயராக சூட்டி ஊரெல்லாம் கூடி ஒலித்தார்களோ…
அவ்வூரார்களே அம்மனித உருவை விட்டு உயிர் நீங்கினால், ஒன்றுகூடி ஒலிக்க அழுதிட்டு இறக்கும் முன் வரை தாங்களே பேரிட்டு ஒலிக்க அழைத்த இறைவனின் திருநாமத்தை நீக்கி…அதுவரை இறந்து போனவர்கள், இனியும் இறக்கப் போகிறவர்கள் ஆகிய யாவருக்கும் பொருந்தும் படியான, பிணமென்று ஒரே பொதுப் பெயரினை இட்டு அழைத்து…
அப்பிணத்தை சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரினில் மூழ்கிய அக்கணமே ஊரார்கள், அவரவர்களுகென்றும் தனித்து இடப்பட்ட இறைவனின் திருப்பெயர்கள் யாவும், பிணமென்று ஒரே பொதுப் பேராக ஒரு நாள் நிச்சயம் மாறும் என்னும் நினைப்பொழிந்து, தன்னை அறிய முயலாமல் தானே கெடுவார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment