“கடந்து+உள்=கடவுள்”
திருமந்திரம் 14வது பாடல்
கடந்து நின்றான் கமலமலர் ஆதி;
கடந்து நின்றான் கடல் வண்ணன் எம் மாயன்;
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே;
‘கடந்து’ என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதை குறிக்கும் சொல்லாகும். அதாவது ‘படைத்தல்’ என்னும் தொழிலுக்கு அதிபதியாய் விளங்கும் ‘கமலமலர் ஆதி எனும் பிரம்மா’ ஒவ்வொரு மானுட யாக்கைக்கும் வெளியே இல்லை, மாறாக ‘வெளி கடந்து’ யாக்கையின் உள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கிறான்.
‘அழித்தல்’ என்னும் தொழிலுக்கு அதிபதியாய் விளங்கும் ‘சம்ஹார மூர்த்தியாகிய ஈசனும்’ ஒவ்வொரு மானுட யாக்கைக்கும் வெளியே இல்லை, மாறாக ‘வெளி கடந்து’ யாக்கையின் உள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு ‘வெளி கடந்து உள்ளேயே’ இருக்கும் பரம்பொருளை ஒருவன் தம் ‘அநுபூதி நிலையில்’ கண்டு உணர்ந்தால் “வெளிக்குள் வெளி(வளி) கடந்து சும்மா இருக்கும் சுகம்” என்று தாம் பெற்ற சுகத்தை பாடி அருளிய வள்ளல் பெருமானைப் போல் எல்லா உயிரும் சுகித்து இருக்கலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
