You Are That! -“யான்/யாம்”

 “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”. 

“மெய்ப்பொருள் காண்ப தறிவு” ஒரு நோக்கில்…

ஒருவர் தம்மை தாமே சுட்டிக் காட்டிக்கொள்ள தமிழில் ‘நான், யான், யாம்’ என்னும் மூன்றுவகை சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. திருக்குறள் முழுவதும் ஆராய்ந்து பார்த்தால் வள்ளுவர் பெருமான் இஃதினில் ‘நான்’என்பதை தவிர்த்து ‘யான்,யாம்’ என்னும் இன்னும் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். 

ஏனெனில் வள்ளுவப் பெருமான் தம்முடைய ஐந்து இந்திரியங்களின் வாயிலாக வெளிப்பட்ட   அறிவுத்திறனை தன்னுடையதே என்று கருதாததின்  காரணம், தான் எழுதிய திருக்குறளில் ஒரு இடத்தில் கூட ‘நான்’ என்று மெய்யை (உடம்பை) மட்டுமே குறிக்கும் சொல்லை பயன்படுத்தவே இல்லை. 

‘யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது உயிரின் அறிவும், வள்ளுவப் பெருமானின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் சொல்லாகும். 

‘யாம்’ என்பதை ஒருமை, பன்மை இவ்விரண்டும் அற்ற சொல் எனக்கொள்ளலாம். அதாவது வள்ளுவப் பெருமானின் மெய்-அறிவும், உயிராகிய-பிரபஞ்ச அறிவும் கலந்து தூய அறிவாக மட்டுமே பிரகாசிக்கும் தன்மையை குறிக்கும் சொல்லே ‘யாம்’ என்பதாகும்.

(யாமிருக்க பயமேன் என்று முருகப்பெருமான் கூறுவது போன்று) 

எனவே நான்’ இல்லாமல், ‘யான்,யாம்’ என்னும் இவ்விரண்டு பதத்தை மட்டுமே கொண்ட  உலகப் பொதுமறை நூலான திருக்குறளின் மெய்ப் பொருளை, ஒருவர் ‘நான்’ என்னும் இந்திரியங்களின் வாயிலாக மட்டுமே அறிய முற்படாமல், மெய்யும், உயிரும் இணைந்த ‘யான்’ என்னும் தன்மையிலும், மெய்யுடன் உயிர் கலந்த? ‘யாம்’ என்னும் தன்மையிலும் இருந்து அறிய முற்பட்டால்? 

திருக்குறள் அதன் மெய்ப் பொருளை அவ்வாறு அறிய முயல்பவருக்கு, தாமே வெளிப்படுத்தும்! 

வாழ்க தமிழ் வாழ்க வள்ளுவம்.🙏🙏🙏

Leave a comment