“இடை மருதா”

     

 

                 “இடை மருதா

பிரச்னோ உபநிஷத்:5.6

ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை‘அகாரம் உகாரம் மகாரம்’ என்னும் இம்மூன்று மாத்திரைகளையும் மானுட யாக்கையின் ‘புறத்திலும் அகத்திலும் இடையிலும்’ முறைப்படி பொருத்தி உபாசித்தால், ஒவ்வொரு மானுட யாக்கையின் வடிவும் சிவலிங்கமாமே! 

“உருவமு மருவமு முபயமு மாகிய

அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி”            

அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)

அதாவதுஇடை மருதர்‘  உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இவ்விரண்டுக்கும் இடையில் உபயமாக, உகார சொரூபமாக, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாக அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டு தன் அருள்நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது

“சிகரமும் வகரமுஞ் சேர்தனி உகரமும்

அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அகவல் (172)

அதாவது உருவமும் அருவமும் சேர காரணமாய் இருக்கும்உகரம்எனும் சபதம் அருட்பெருஞ்ஜோதியாய், அது தனிப்பெரும் கருணையாய்இடை மருதராகவீற்றிருந்து அருள் பாலித்து கொண்டு இருக்கின்றது

அதாவதுதிரு இடை மருதன்மகாலிங்க சுவாமி இம் மானுட தேகத்தின் புறத்திலும் இல்லாமல், அகத்திலும் இல்லாமல், உகாரப் பொருளாய் இடை மருதானாக ஒவ்வொரு மானுட தேகத்தின் இடையில் வாசம் செய்து அருள் பாலித்து கொண்டு இருக்கின்றான் 

சிவவாக்கியர் தம் பாடல்: 369 ல்

மாறுகொண்ட ஹூவிலே (உகாரத்தில்) மடிந்ததே சிவாயமே“. பாடியுள்ளார். அதாவதுஹூஎன்னும் உகார ஒலியால் இம்மானுட யாக்கையின் இடையில் சிதம்பர ரகசியமாக மறைந்து வாசம் செய்யும் ஆத்மலிங்கத்தை குருவருளால் கண்டறிந்து உபாசித்தால்… 

“உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்” என்னும் திருமூலரின் திருமந்திர வாக்கின்படி, ஆத்மலிங்கமாய் இவ்உடம்பின் இடையே அமர்ந்திருக்கும் இடைமருதர்,  இவ்ஊனுடம்பை நெருப்புக்கும் மண்ணுக்கும், இரையாகாமல் காத்து, தேகஆலயமாக ஆக்கி அருள் புரிவார்

“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இடை மருதரை நினைத்தே! 

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 




Leave a comment