“ஆறிலும் சாவு நூறிலும் சாவு”

 “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்பது ஒரு பழமொழி” 



ஆறு என்பது ஆறறிவையும் உள்ளடக்கிய consciousness என்னும் உணர்வு அல்லது பிரக்ஞை ஆகும். ஒவ்வொரு மானுட தேகத்திலும் முதலில் இறப்பு ஏற்படுவது ‘brain death’ எனப்படும் உணர்வின் இழப்புதான்! உணர்வு மறைந்த பின்னரே தேகத்தில் உள்ள மற்ற நூற்றுக்கணக்கான உறுப்புகள் யாவும் மறைய அல்லது இறக்கத் தொடங்கும்!! 

பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்”  என்பது ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம். பிரக்ஞை எனப்படும்  இவ்வுணர்வை, அவ்-உணர்வு இருக்கும் போதே அறியப்பெற்று அதுவாகவே ஆனால்? அத்தகையோர் ஆறிலும் சாவை கடந்து அதன் பொருட்டு நூறிலும் சாவை கடந்து, வடலூர் இராமலிங்க சுவாமிகள் போன்று இறப்பில்லா பெருவாழ்வு பெற்று இன்புற்று இருப்பார்கள்! 

“ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் 

அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்”

(ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் : தாயுமான ஸ்வாமிகளின் பாடல்கள்) 

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏