“சுத்தமும் அசுத்தமும் தோயுர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்: 777
சுத்தமும் அசுத்தமும் இப்புவியில் மாறி மாறி உருவாகிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். இறக்கின்ற ஒவ்வொரு உயிர்களின் உடலும் அசுத்த மயமானதே!
அவ்வாறு இறந்த உடல்களின் சிதைவின் முதல் நிலை தன்னியக்கப் பகுப்பு அல்லது சுய-செரிமானம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இறந்த உடனேயே தொடங்குகிறது. இரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் நிறுத்தப்பட்டவுடன், உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவோ அல்லது கழிவுகளை அகற்றவோ வழி இல்லை. அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு அமில சூழலை ஏற்படுத்துகிறது, இதனால் உயிரணுக்களில் உள்ள சவ்வுகள் சிதைந்துவிடும். சவ்வுகள் உள்ளே இருந்து செல்களை உண்ணத் தொடங்கும் நொதிகளை வெளியிடுகின்றன.
இதன் மூலம் அசுத்தம் நிறைந்த இறந்த உடல்கள் மண்ணுடன் மண்ணாக கலந்து சுத்தமாகி விடுகிறது. அவ்வாறு நிகழாமல் போனால் இந்த பூமியே அசுத்த மயமாக மாறி இருக்கும். தோய்தல் என்றால் கலத்தல் என்று பொருள், அதாவது அசுத்தமான இறந்த உடல்களுடன் நுண்ணுயிர் கிருமிகள் கலந்து அசுத்தத்தை போக்கி இப்புவியை சுத்தமாக்கி கொண்டு இருக்கிறது.
ஆகவே தான் வள்ளல் பெருமான் அத்தகைய தோயுர்க் கிருமிகளுக்கும் அருள் வேண்டி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பிக்கின்றார்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


