You Are That! -” illuminated hand”

திருமூலர் திருமந்திரம்: 1

“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.”
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை:

‘கரம்’ என்னும் சொல்லுக்கு ‘ஒளி மற்றும் ஒளிக் கதிர்கள்’ என்று பொருள்கள் உள்ளது. ஐந்து என்பது ஐம்புலன்கள் ஆகிய ‘மெய் வாய் கண் செவி நாசி’ இவைகளை குறிப்பது. இவ்வைந்து புலன்களும் ஒளி பொருந்திய கரத்தோடு இணையும் பொழுது அதன் ஒளி கதிர்கள் ஐம்புலன்கள் உள்ளும் ஊடுருவும். இவ்வாறு நம் கரங்களையும், ஐம்புலன்களையும் ஒளி பொருந்தியதாக ஆக்கவல்ல…
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்:

எல்லா வினாக்களுக்கும் நாயகனாய் விளங்கும், சிவகுரு பரம்பரையில் தோன்றிய ஞானகுருவான,🕉️ பிரணவப் பொருளாய் விளங்கும் விநாயகனை…
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே:

நம்முடைய அறிவாகிய ( புந்தி என்பதற்கு அறிவு என்று பொருள் உள்ளது)

ஒளியை தூண்டும் சுடர் கடவுளாக தியானித்து விநாயகனின் திருவடிகளை போற்றுவோமாக!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment