You Are That! -“Weapon letter”

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

திருமந்திரம்:2193

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்:

இங்கு பசுக்கள் என்று திருமூலர் குறிப்பிடுவது மனிதர்களையே ஆகும். அதாவது எவ்வாறு மனிதர்களின் முகங்கள் வேறுபட்டு உள்ளது அவ்வாறே அவர்களின் குணங்களும் பல வண்ணங்களாகவே இருக்கும். எனினும் அனைத்து மனிதர்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘பிராணன்’ என்பது பசுக்களின் பாலொரு வண்ணம் போன்று ஒரே வண்ணம் தான்!
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்:

பிருஹதாரணியகோபநிஷத்து: 2:1:20

சிலந்திப்பூச்சி தன்னிடம் இருந்து உண்டான நூலின் வழியே எங்கனம் வெளிக்கிளம்புகிறதோ, நெருப்பிலிருந்து உண்டான சிறு பொறிகள் எங்கனம் நெருப்பின் ஒளியுடன் கிளம்புகின்றனவோ, அங்ஙனம் ஆத்மாவிடம் இருந்து எல்லா பிராணங்களும், எல்லா மனித உருவங்களும் வெளிப்படுகின்றது.
ஆகவே இங்கு திருமூலர் ‘ஆயன்’ என்று குறிப்பிடுவது எல்லா மனிதர்களிலும் குடிகொண்டிருக்கும் ஆத்ம சொரூபத்தையே எனக் கொள்ளலாம். பசுக்களின் பாலொரு வண்ணம் போன்று, பசுக்களை மேய்க்கின்ற ஆயன் என்னும் ஆத்மாவும் ஒருவண்ணம் தான், அதுவே ‘சிவ’ வண்ணமாய் இருக்கிறது!

பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே:

மானுட யாக்கையையும், பிராணனையும் மேய்க்கின்ற ஆத்மாவிடம்

உள்ள ஆயுத எழுத்தே கோலாகும். அவ்வாறு ஆயன்கோல் போடில்? பஞ்சபூதங்களில் திரிபான இம்-மானுடயாக்கையும், பிராணனும் தன் தலைவனாகிய ஆத்மாவை, சிவத்தை மீண்டும் விடாது பற்றிய படியே இருக்கும்!!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment