அருட்பெருஞ்ஜோதி அகவல்:(251)
“சித்திஎன்பது நிலைசேர்ந்த அநுபவம்
‘சித்தி’ என்பதின் பொருள் ‘கைகூடுகை’ என்றும், ‘நிலை’ என்பதின் பொருள் ‘தன்மை’ என்றும் கொள்ளலாம்.
அதாவது சித்தி என்பது இதுவரை அடையாத தன்மை ஒன்றை அடையப் பெறுவது என்று பொருள் கொள்ளலாகாது. எப்போதுமே பிரியாத சதா கைகூடிய நிலையாகவே இருக்கும் அத்தன்மையை உணர்ந்து, அதனுடன் ஒன்றிப்போவதே ‘சித்தி’ என கொள்ளலாம்.
‘திறல்’ என்பதற்கு: வலிமை; ஊக்கம்; பகை; போர்; ஒளி; வெற்றி என்று
அதாவது அத்தகைய சேர்ந்த நிலையென்னும்…மெய்யனுபவத்தை அடையப் பெறும் ஊக்கமாகவும், ‘மாயை’ என்னும் பகையால் பிரிந்தது
அதாவது ‘சேர்ந்த நிலை’ என்பது புலன்கள் பொறிகளாக மாறி செயல், செய்படு பொருள், செய்பவன் என்னும் மூன்று தனித் தன்மைகளையும் ஒன்று கூட்டி அனுபவிக்கும் நிலை அன்று!
மாறாக புலன்கள், புலன்களாகவே இருந்து அனுபவிக்கும் நிலை. அதாவது பார்க்கும் அந்நிலையிலேயே, பார்வை, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன் என்னும் மூன்று தன்மைகளும் ஒன்றென சேர்ந்த பரவச நிலையாக, அதுபோன்றே நினைக்கும் அந்நிலையிலேயே சேர்ந்த சமாதி நிலையாக, அறியும் அந்நிலையிலேயே சேர்ந்த மெய்யுணர்வு நிலையாக, அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால், திறனால் அனுபவிக்கப்படும்!!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


