“You are Internally related”
‘வார்த்தைகள்’ என்பது ஒரு சாக்குப் போக்கு. ‘உள் பந்தம்’ தான் ஒருவரை இன்னொருவரிடம் இழுக்கிறது, வார்த்தைகள் அல்ல, என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று.
ஆமாம் சாக்கு போக்கான ‘வார்த்தைகள்’ கொண்டவரிடத்தில் இருந்து அதற்குரிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படாது. தொடக்கத்தில் அத்தகையவரின் சாக்கு போக்கான வார்த்தை ஜாலங்களில், இன்னொருவரின் அறியும்திறன் மங்கி, மயக்கத்தால் இழுக்க பட்டாலும், முடிவில் அறிவில் தெளிவு ஏற்பட்ட பின்பு மயக்கமும் நீங்கி, அதுவரை அத்தகையவருடன் கொண்டிருந்த மாயபந்தமும் விலகிவிடும். அதன் பின்னரே உண்மையான ‘உள் பந்தத்தை’ அறிய முற்படுவார்கள்!
ஆனால் ‘உள் பந்தம்’ என்பது ஒருவர் தன் உள்ளுக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியுடன், தனக்குத்தானே பந்தப்படுத்திக் கொள்வது. அங்கு சாக்கு போக்கான வார்த்தைகள் எதுவும் வெளிப்படாது, மாறாக அத்தகையவர் கொண்டிருக்கும் மாறாத பக்தியும், அதன் பொருட்டு வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியின் அருளுமே… ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு அங்கு மாறாத பந்தத்தை நிலைபெறச் செய்கிறது!!
வள்ளல் பெருமானின் திருவருட்பா மெய்யருள் வியப்பு:
“எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.”
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


