“Give before you die”
“உனக்குக் கொடுக்கப்பட்டதை மரணம் பறிக்கும் முன், கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு.” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று.
இங்கு கொடுக்கப்பட்டது யாரால் என்னும் கேள்வி எழுந்தால் அது இறைவன் ஒருவனால் என்றே பதில் இருக்கும்.
அவ்வாறே இறைவனாலும் மண்ணையோ, பொன்னையோ, அல்லது பொருளையோ ஒருவருக்கு கொடுக்க இயலாது. மாறாக அவனிடம் எது உள்ளதோ அதையே அவனால் கொடுக்கவும் இயலும்.
அவனிடம் உள்ளது நித்திய ஜீவனுக்கு உரிய மரணமில்லா பெருவாழ்வு ஒன்றேயாம்! இத்தகைய பெரும்பேறு இறைவனால் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால்…
அத்தகைய பெரும்பேற்றை தமக்கு மட்டுமே உரிய பேற்றாக எண்ணாமல், இறைவனால் கொடுக்கப்பட்டதை உரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுத்துவிட்டால்?
அத்தகையவர்கள் மரணம் நெருங்கும் முன்பே மரணமில்லா பெருவாழ்வு பெற்று இறைவனடி சேரலாம்!!
வள்ளல் பெருமானின் திருவருட்பா:
“அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் இடைந்தொருசார் அலையாதீர் சுகம் எனைப்போல் பெறுவீர் யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்”
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


