You Are That! -” பாகன்”

திருமூலரின் திருமந்திரம்: 577
“பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே”.
“பன்னிரண் டானை பகல்இர வுள்ளது”
‘பன்னிரண் டானை’ என்பது உயிர் எழுத்துக்கள்பன்னிரண்டையும் உள்ளடக்கிய ‘மங்காத ஆன்ம ஒளியினை’ குறிப்பிடுவது. இஃது அறியப்படாத வரையில் அறியாமை என்னும் இருளில் மறைந்த ஒளியாக அதாவது பகலும் இரவாகவே இருந்து கொண்டிருக்கும்.

“பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்”
இவ்வாறு பன்னிரண்டையும் உள்ளடக்கிய மங்காதஇவ்-ஆன்ம ஒளியானது யானையைப் போன்று சதா அசையும் தன்மை கொண்டது.

இவ்-ஆன்ம ஒளியானது இஃதினை முழுமையாக உணர்ந்து, அறிந்து குருவாய் விளங்கும் பாகன் ஒருவனுக்கு மட்டுமே கட்டுப்படும். ஆயினும் இப்-பன்னிரண் டானை(உயிர்) தம் அறியாமையினால் தம் பாகனை அறிகிலன்.
“பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்,
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே”
பன்னிரண் டானைக்கு ஒப்பான இவ்வுயிரில் தன்னை அறியும் தாகம் உருவாகி, தம் பாகனை தேடிக் கண்டறியப்பெற்றப் பின்பு….வெளிப்படும் மங்காத, அசைவற்ற, இருளே இல்லாத ஒளியினில், பகலும் மறைந்து போகும்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

Leave a comment