திருமூலர் திருமந்திரம் உரை எண் 139 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
”தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே”-

.”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே”-
இது திருமூலரின் திருமந்திர உரை எண்1680:

தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
‘தெளிவு’ என்பது இருளிலிருந்து பிறப்பதில்லை, ஒளியிலிருந்து தான் பிறக்கும். மேலும் அவ்வொளியானது புதியதாக தோன்றக்கூடிய ஒளியல்ல. அது ஆதியும் அந்தமும் இல்லாத ஸ்வயம் பிரகாச அருட்பெருஞ்ஜோதி.
‘தெளிவு’ என்னும் இவ்- அருட்பெருஞ்ஜோதியே ஒவ்வொரு மானுடஉடம்பையும் ஒளிரூட்டி அதன்மூலம் இவ்வுலகையும் பிரகாசிக்கச் செய்கின்றது. ஆகவே இத்-தெளிவுடன் விளங்கும் எந்தவொரு மானுட வடிவத்தையும் ‘குருவின் திருமேனி’ எனக்கொள்ளலாம். மேலும் இத் தெளிவு பெற்றோரே மற்றவர்களிடம் உள்ள மாயையாகிய இருள் என்னும் ‘குருட்டினை நீக்கும் குருவாய்’ பிரகாசிப்பவர்கள்…
.
இத்-தெளிவின்’ மூலம் தம் உடம்பை அறியும் அறிவை அறியப்பெறாமல், மாறாக தம் உடம்பையும் இவ்வுலகத்தையும் மட்டுமே காணும் எந்தவொரு மானுட வடிவமும் மாயை என்னும் இருளை நீக்க இயலாத, அதாவது ‘குருட்டினை நீக்காக் குருவாகவே’ தாமும் இருந்து கொண்டு…

“குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே”. என்று ஏனையோருக்கும் தெளிவில்லாத இவ்- அறியாமையையே போதித்து…

“தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே”
எனும் திருமூலரின் திருமந்திர உரை
எண் 1480, ன் படி,

இத்தகையோர் யாவரும், தெளிவறி யாதாராய், அதனால் சிவனை அறியாதாராய், அதனால் சீவனு மாகாமல், அதனால் சிவமாக மாட்டாமல், மரணம் என்னும் படுகுழியில் மீண்டும் மீண்டும் விழுந்து, தீராது பிறந்து கொண்டும் இருப்பார்கள்…

மாறாக மாயை என்னும் . ”குருட்டினை நீக்கும் குருவினைக் கொண்டவர்கள், தெளிவின் மூலம் தம் உடம்பையும் அதன் வழியே இவ்வுலகத்தையும் அறியப் பெற்றவர்களாய், அத்-தெளிவையே ‘தம்குருவின் திருமேனியாக கண்டு, அத்-தெளிவையே ‘”அருட்பெருஞ்ஜோதி” என்னும் தம் குருவின் திருநாமமாக’ இடைவிடாது ஜெபித்து கொண்டு, அத்-தெளிவின் வழியே வெளிப்படும் தம் உள்ளுணர்வையே ‘தம்குருவின் திருவார்த்தை’ என கைகொண்டு,
ஆதியும் அந்தமும் இல்லாத ஸ்வயம் பிரகாச ஜோதியாய் விளங்கும்

அருட்பெருஞ்ஜோதியையே ‘தம்குரு உருவாக’ தம்முள்ளேயே இடைவிடாது சிந்தித்து, நீங்காத தெளிவு பெற்று, தாமும் அச் ஜோதியில் ஒன்றாகி ஐக்கியமாவார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment