You Are That! – “Not This (or) That”

“அதுஇது என்னாது அனைத்து அறிவாகும்
அதுஇது என்று அறிந்து உந்தீபற

அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற”.

திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய

திரு உந்தியார். பாடல் :39

ஒவ்வொருவர் உள்ளும் இடைவிடாது சதா ஒலித்துக் கொண்டிருக்கும் ‘நான்’ எனும் சப்த உணர்வு, பஞ்ச பூதங்களின் கலவையான அவர்கள்தம் தேகத்தை ‘இது’ என்றும் ஏனையோர்களின் தேகத்தை ‘அது’ என்றும், அதாவது பஞ்ச பூதங்களாக அறியாமல் உடம்பாகவே அறிந்துகொண்டு, ‘அது இது’ என்று இடைவிடாது சுட்டிக் காண்பிக்கும் சிற்றறிவை கொண்டது.


ஆனால் இந்த சிற்றறிவுகளுக்கெல்லாம் ஆதிமூலமாகவும், அனைத்துமாகவும், அவரவர் உள்ளுக்குள்ளும் இருந்து கொண்டு,
ஒளிர்ந்து கொண்டிருக்கும் பேரறிவு என்பது சிவமேயாம்!
ஆகவே உள்ளுக்குள் இடைவிடாது சதா ஒலித்துக் கொண்டிருக்கும் சிற்றறிவான ‘நான்’ எனும் இச்-சப்த உணர்வை மாற்றி சிவமாகவே ஒலிக்கச் செய்தால்….
அஃதுவரை அவர்களின் சிற்றறிவால் ‘இது’ என்று உணரப்பட்டிருந்த அவர்கள்தம் தேகமும், ‘அது’ என்று அறியப்பட்டிருந்த ஏனையோர்களின் தேகமும், பேரறிவாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிவபெருமானின் பேரருளால் ‘அதுவும் இதுவும்’ சிவமயமாக விளங்கும் பஞ்ச பூதங்களாகவே அறியப்பட்டப்பின்…
தனித்து சுட்டிக் காண்பிக்க ஏதுமின்றி எல்லாம் சிவமயமாகவே ஆகிவிட்டபடியால்! அத்தன்மையானது அவிழ்ந்து விரிந்த சடையானகவே அத்தகையோரால் உணரப்படும்.

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment