You Are That! – “பாண்டவர்கள்”

“பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டார் என்று உந்தீபற

காணாதார் காணார் என்று உந்தீபற”.

திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்

அருளிய திரு உந்தியார்: பாடல் 35:

சிவத்தின் நாமம் ‘நான்’ என்பதாகும் என்பது யஜுர் வேதத்தின் இறுதி வாக்கு! அது சக்தியின் அம்சமாக,‘திரௌபதி யாக’, அர்த்தநாரீஸ்வரராக ஒவ்வொரு மானுட தேகத்திலும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்னும் ஐம் பொறிகளும், புலப்படாத அறிவு என்னும் ஆறாவது பொறியும் ஒன்றிணைந்த ஆண்மக்களாக…
அதே தேகத்தினுள் நான் என்னும் சப்த உணர்வாய் விளங்கும் பெண்ணை பேய்போலப் பிடித்துக் கொண்டு, உள்ளிருக்கும் சிவத்தை நோக்கினால் வெளிப்படும் ஜோதி வடிவை கண்டவர்களே ‘பாண்டவர்கள்’ ஆவார்கள்!

இப்படிக் காண இயலாதவர்களின் தேகத்தில் ஒளிரும் ஐம்பொறிகளும், அறிவும், உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘நான்’ என்னும் பெண்ணோடு ஒன்றிணைய முடியாமல், புலன்களோடு பொருந்தி ‘கௌரவர்களாக’ வெளிச் சென்று விடுவதால்…


இத்தகையோர்கள், சக்தியையும் காணாதவர்களாய் சிவத்தையும் காணாதவர்களாய்..

அர்த்தநாரீயின் திருவருளை உணரமுடியாமல் போய்விடுவார்கள்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment