“பாகம் பிரியாள்”
திருமூலரின் திருமந்திரம்:-201
“ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே”.
விளக்கம்:
ஈசாவாஸ்யோபநிஷத்து ॥12॥,॥14॥
12.அஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகாத உயிர் (அல்லது) ஆத்மா. ‘ஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகும் மெய் (அல்லது) உடம்பு. எவர்கள்(தமக்கு அன்னியமாக உள்ள) ‘அஸம்பூதி’ யை உபாசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகின்றனர்: எவர்கள் (தமக்கு அன்னியமாக உள்ள) ‘ஸம்பூதி’ யில் ஆசை வைத்தார்களோ அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றவர்கள் போல்வர்.
14. எவன் தன் அஸம்பூதியையும் தன் ஸம்பூதியையும், இரண்டையும் ஒன்றாகக்கூட்டி அறிகிறானோ அவன் ஸம்பூதியால் சாவைத் தாண்டி, அஸம்பூதியால் சாகாத்தன்மையை எய்துகிறான்.
மெய் என்னும் இவ்வுடம்பிற்கு, மனைக்கு சொந்தமான, மனையாள் எனும் உயிர் அகத்தில் இருக்க! அதனுடன் தம் மெய் கூடி இருப்பது என்பது, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்பது போன்றாகும். அதாவது தம்-மெய்யுடன் தம்-உயிர் கலக்க, உயிர்மெய் எழுத்தாக ஜோதி வடிவாக உருமாறி, சாவைத் தாண்டி சாகாத்தன்மையை எய்தி, அருட்பரகாச வள்ளலாரை போல்! மரணமில்லாப் பெருவாழ்வை பெற்று என்றென்றும் இன்புற்று இருப்பதாகும்…
அஃதின்றி எவர்கள் தம் அகத்தில் உள்ள உயிரை தம் மெய்யால் நேசிப்பதை விட்டு, அதாவது,
ஏனையோர் உடம்பையும், அவ்வுடம்பில் குடிகொண்டுள்ள உயிரையும் நேசிப்பது என்பது?
காத்த மனையாளைக் காமுறும் காளையர்”
அதாவது கணவனால்(உடம்பால்) பெறப்படும் இன்பம் வேறு, மனையாளால் (உயிரால்) பெறப்படும் இன்பம் வேறு. ஆகையால் எவன் இவ்விரண்டையும் ஒன்றாகக் கூட்டின பேரின்பத்தை அனுபவிக்கின்றானோ! அவனே மிகச் சிறந்த இல்-அற வாசியாவான்!!
ஒன்றாகக்கூட்டி அறிதல் என்பது, எவ்வாறு இரு வேறு மெய் எழுத்துக்கள் ஒன்றாகக்கூடாதோ, இரு வேறு உயிர் எழுத்துக்கள் ஒன்றாகக்கூடாதோ, ஆனால் மெய்யுடன் உயிர் எழுத்து ஒன்றாகக்கூடி உயிர்மெய் எழுத்தாக உருமாறுமோ அவ்வாறே….
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


