திருமூலரின் திருமந்திரம் – 193
“துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற் சென்றனவே“
“துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி“
துடுப்பு: என்பதற்கு அகப்பை என்று பொருள் உள்ளது.
அகப்பையின் பயன்பாடு பானையில் இருக்கும் அரிசி உலையை நன்கு கிளறி சமைப்பதற்காகத்தான். அதுபோன்றே பானையை ஒத்த இம் மானிட தேக உலையுள், உயிர் வித்தாக விளங்கிக் கொண்டிருக்கும் ஒன்றேயான அரிசியை கிளற, அகப்பையை ஒத்த வாசியை முறையாக கையாண்டு…

அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி:-
‘அகாரம், உகாரம், மகாரம்‘ என்னும் ஓங்காரத்தின் மூன்று மாத்திரை(கல்) கொண்ட அடுப்பில், மெய், வாய், கண், செவி, நாசி எனும் ஐம்புலன்களையும், ஐந்து எரிக் கொள்ளிகளாக மாற்றி…

அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி:-
அடுப்பினை அணையாமல் இடைவிடாது எரித்து, அஃதினில் பானையை ஒத்த இம் மானிட தேக உலையைக் கொண்டு, உயிர் வித்தாக விளங்கிக் கொண்டிருக்கும் ஒன்றேயான அரிசியை, திருவாசி என்னும் அகப்பையால் நன்கு கிளறி சமைத்து ஈசனுக்கு உணவாக படைக்காமல்…

விடுத்தன நாள்களும் மேற் சென்றனவே:-
“பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே“.
என்று அப்பர் பெருமான் பாடியுள்ள படி, அவ்வாறு ஈசனுக்கு உணவாகாத இத்தேகம் பிறந்தும் பிறவாத தேகமே!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏