You Are That!- “ஸத்சங்கம்”

“ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி”.

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

பொதுப்பொருள்:
ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.

மெய்ப்பொருள்:
ஸத்: என்பதற்கு ஸத்தியம் என்று பொருள் உள்ளது. ஸத்தியம் என்பது அவரவர்கள் உள்ளுக்குள் உறைந்தும், மறைந்தும் இருக்கும் சிவம் தான்.
சங்: என்பதற்கு ‘இடைவிடாத நாதம்’ என்று பொருள் கொள்ளலாம்.
அதாவது ஒவ்வொருவர் உள்ளும் இந்த ‘சங்க’நாதம் ‘இடம்புரி’ சங்கொலியாக பிறந்ததிலிருந்து தவறாகவே ஒலித்துக் கொண்டு ‘அஸத்’ சங்கமாகவே இருக்கிறது. குருவருள் கூடின் ‘வலம்புரி’ சங்காக மாற்றப்பட்டு, ஸத்துடன் இணைந்து ஸத்சங்கமாக, ‘சத்தியும் சிவமும்’ இணைவுகள் அற்ற சிவமாக ஆகி…தனிமையில் இருந்தால் பந்தம், பற்றுகள் முழுவதும் விலகி, ஜீவன் முத்திக்கு பாத்திரமான பரிசுத்த ‘ஸத்தியம்~ சிவம்~ சுந்தரமாக’ வடிவெடுப்பார்கள், என்பதாக ஆதிசங்கரரின் இந்த ஸ்துதிக்கு பொருளாகக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment