You Are That! – “Overcoming anger”

திருமூலரின் திருமந்திரம்: 2264

“வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்

கல்லும் பிளந்து கடுவெளியாமே”
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை:

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க” என்பது வள்ளுவர் பெருமானின் குறள் கூற்று. ‘சினம்’ என்னும் ‘வெகுளி’ பிறந்த ஒவ்வொருவர் தேகத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் குணம். இயல்பை முழுவதுமாக அழிக்க இயலாது. மாறாக ‘சினம்’ என்னும் இக்குணம் தம்தேகத்தை எப்போதும் பாதிக்காத அளவிற்கு, அதாவது ‘வெகுளியை’ எத்தருணத்திலும் வெல்லும் ‘அளவில்’ அஃதினை எப்போதும் தம் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருப்பதே வெகுளியை வெல்லும் செயலேயாகும்.
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை:

அதேபோன்று இயல்பாகவே இடைவிடாது தோன்றிக் கொண்டே இருக்கும் ‘சிந்தையையும்’ முழுவதுமாக தடுத்து நிறுத்துவது என்பது பொதுவாக இயலாத ஒன்று. எனினும் ‘வெகுளியை’ எத்தருணத்திலும் வெல்லும் ‘அளவில்’ தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு ! ‘சிந்தையையும்’ தாம் சொல்லும் ‘அளவிற்கு’ செலுத்தி’ மீண்டும் திரும்பப் பெறும்

திறனும் அமைந்துவிடும்!!

‘சிவனருள்’ என்பதும் இதுபோன்றே இயல்பாகவே ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். எப்பொழுது ‘சினமும் சிந்தனையும்’ ஒருவர் கட்டுக்குள் வருகின்றதோ, அப்போதே அதுவரை நீறுபூத்த நெருப்பாக இருந்த ‘சிவனருளும்’ அல்லும் பகலும், அதாவது உறக்கத்திலும், விழிப்பிலும் இடைவிடாதுஒளிர்ந்து….செருக்கெண்ணும் அகங்காரக் கல்லை பிளந்து ‘வெட்ட வெளியாய்’ ஆக்கிவிடும்.

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment