“யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-9

“யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே”?

‘யான்’ என்னும் சொல் ‘நான்’ என்பதிலிருந்து மாறுபட்டது.
‘நான்’ என்பது: ‘சொல்பவன்’ தன்னை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொள்வதற்காக பயன்படுத்தும் சொல். ஆனால் ‘யான்’ என்பது, ‘சொல்பவன்’ தம்மோடு
இரண்டறக் கலந்த தம் இறைவனையும்
இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தும் சொல்.

மணிவாசகப் பெருமான் தம்முடன் இரண்டறக் கலந்துவிட்ட சிவபெருமானையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக, ‘யான்’ என்னும் பதத்தை இங்கு கையாண்டுள்ளார். மேலும் தன்னைத்தானே சுட்டிக் காட்டிக் கொள்வதற்காக பயன்படும் ‘நான்’ என்ற ஒருமையுள் ஒருமைச் சொல், இங்கு ‘யான்’ என்னும் ஒருமையுள் பன்மைச் சொல்லாகவே மாறி விட்டபடியால், சிவபெருமானோடு மணிவாசகப் பெருமான் கொண்ட தொடர்பானதும் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருக்கிறது…

ஆகையால் மணிவாசகப் பெருமானால் சிக்கெனப் பற்றப் பட்ட பற்றும் உறுதி குலையாது, இடைவிடாது, தொடர்ந்து, பற்றப்பட்ட படியே இருந்து கொண்டே இருப்பதால், அவன் எங்கு எழுந்தருளுவது, இனியே”? என்பதை
மணிவாசகப் பெருமான் சொல்லிய இப்பாட்டின் பொருள் எனக்கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏