“ஈசனே! சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-7

“சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;

எங்கு எழுந்தருளுவது, இனியே” ?

ஈசன்: என்பதற்கு எப்பொருட்கும் இறைவன்; தகப்பன்; குரு; அரசன்; தலைவன்; மூத்தோன் என்று பொருள்கள் உள்ளது.

சிவபெருமானை, எப்பொருட்கும் இறைவனாக பார்க்கும்போது, மணிவாசகப் பெருமான் தம்மெய்யையும் அப் பொருட்களில் ஒன்றாகவும்…
சிவபெருமானை, தகப்பனாக நேசிக்கும்போது தாம் மகனாகவும்….

சிவபெருமானை, குருவாகவே கண்டபோது தாம் சீடராகவும்….

சிவபெருமானை, அரசனாக எண்ணும்போது தாம் குடிமகனாகவும்….

சிவபெருமானை, தலைவனாக நோக்கும்போது தாம் தொண்டனாகவும்….

சிவபெருமானை, மூத்தோனாக உணரும்போது தாம் இளையோனாகவும்…
இயல்பாகவே மாறிபோய் விடுவதால்,
“சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;


“சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;

எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக மணிவாசகப் பெருமான்
சொல்லிய பாட்டின் பொருள் இது எனக்கொள்ளலாம்

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏