“எம்பொருட்டு சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-1

“சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே?” இது திருவாசகத்தில் பிடித்த பத்து என்பதில் உள்ள முதல் பதிகம்.

வாஸ்தவத்தில் சிவனின் பேரருள் எங்கு, எப்படி, எத்தருணத்தில் வெளிப்படும் என்பதனை அவனே அறிவான்! பொதுவாக ஒரு செயல் விரைந்து செய்யப்பட வேண்டுமெனில் ‘இமைப்பொழுது’ என்னும் சொல் பயன்பாட்டிற்கு வரும். ‘கண் இமைத்தல்’ என்பது இயல்பாகவே தேகத்தில் நிகழும் செயல். அத்தகைய இமைப்பொழுது என்னும் மாத்திரைக்குள்ளும் (மாத்திரை என்பது காலத்தை குறிக்கும் சொல்) உட்படாதது. அவனது அருள்ஜோதி வடிவம்.

பைபிளில், “நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார்” என்று இயேசு பிரான் கூறியது போல்,

மணிவாசகப் பெருமான் எதிர்பாராத அத்தருணத்திற்காகவே, உலோபத்தனமாக (பேராசை கொண்டு) விழிப்புடன் இருந்து, அவனது ஜோதி வடிவம் வெளிப்பட்டவுடன் விரைந்து அவனது திருவடிகளை இறுக உறுதியாக ‘‘எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்கிறார்’..

அவ்வாறு மாத்திரைக்கு (காலத்துக்கு) உட்படாத அத்தருணத்திற்குள் வெளிப்பட்ட அவனது திருவடிகளை மணிவாசகப் பெருமான் சிக்கெனப் பிடித்ததால்….

(சிக்கென: என்பதற்கு உலோபத்தனமாக; விரைவாக; இறுக; உறுதியாக; என்று பொருள்கள் உள்ளது).

சிவபெருமானால் இனி வேறு எத்தருணத்தில், எங்கு எழுந்தருள இயலும் என்னும் கேள்விக்குறியாக ? மணிவாசகப் பெருமான் ‘சொல்லிய பாட்டின் பொருள்’ இது எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏