You Are That! -“Cosmic dance”

“ஆனந்தாண்டவ நடராஜப் பெருமான்”

நடராஜப் பெருமானின் ஆட்டம் என்பது பஞ்ச அம்பலங்களான பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் என்னும் இவைகளில் மட்டுமில்லை. பஞ்ச பூதங்களின் திரிபான ஒவ்வொரு மானுட யாக்கையிலும் கூட அம்பலத்தான் ‘சிவா-வாசியாக’ ஆடிக் கொண்டுதான் இருக்கிறான்.
‘வாசி எனும் மூச்சாக அம்பலத்தான்’ இம்மானுட தேகத்தில் இடைவிடாது ஆடிக்கொண்டே இருப்பதால்தான்… ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், செவி, நாசி போன்றவைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘சிவா- வாசியாக’ இம்மானுட தேகத்தில் ஆடவில்லையெனின், ஐம்புலன்களும் செயலிழந்து போய்விடும்.

தில்லை நடராஜப் பெருமானிடம் வேண்டுவது யாதெனின் ஆறாவதாக, ஆறறிவு படைத்த ஒவ்வொரு மானிட அறிவிலும், திருவாசியாக நின்று ஆனந்த தாண்டவம் ஆடவேண்டும் என்பதேயாம். ஏனெனில் அந்த ஆனந்த தாண்டவத்தில்தான் பஞ்சபூதங்கள், பஞ்ச கர்மஇந்திரியங்கள், பஞ்ச ஞானஇந்திரியங்கள், மனம், புத்தி, அகங்காரம் என்னும் 18ம் ஒடுங்கப் பெற்று சிவம் ஜோதி வடிவாக ஒளிரக்காணலாம்.

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment