திருஞானசம்பந்த பெருமான் பதிகம்:
“செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே”.
இதுவரை புறவழிபாடு மூலமே (நல்கு:) எனக்கு அருளைப்புரிந்து
வந்த (நம்பனே:) சிவனே, இனி என் (சிந்தை யார்தொழ:) புறவடிவம் போன்றே விளங்கிக் கொண்டிருக்கும் அகவடிவமான என் சிந்தை யார்தொழும் படி, (செல்ல வுந்துக:) புறவழிபாட்டிலிருந்து அகவழிபாட்டிற்க்கு (மாறருள்🙂 மாற: செல்ல, (உந்துக:) தள்ளி அருள்செய் (நம்பனே🙂 சிவனே!

ஏனெனில் புறத்திலிருந்து திரும்பி அகவழிபாட்டிற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதன்று, (நல்கு:) விருப்பம் ஏற்ப்பட்டாலன்றி உருவாகாது. அப்படிப்பட்ட விருப்பத்தை அருள்செய்து, அகத்துக்குள் சென்று சிவனை வழிபட (உந்தி:) தள்ளி அருள் செய்க என்று ஞானசம்பந்தப் பெருமான் மீண்டும் மீண்டும் பத்து முறை திருக்கொள்ளம்பூதூர் நாதனிடம் இவ்வாறு விண்ணப்பிக்கிறார். இறுதியில்
“இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே”.
ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர் என்றும் பூர்த்தி செய்கிறார்.
என்றும் வானவ ரோடிருப் பாரே”.
ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர் என்றும் பூர்த்தி செய்கிறார்.
திருச்சிற்றம்பலம்🙏