அப்பர் பெருமான் அருளிய தேவாரம்:
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே.
பாடல் எண் #1674
விளக்கம்:
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்:
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்”
சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்!
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்:
பாத்திரம்: என்பதற்கு ‘உடல்’ என்று ஓர் பொருள் உள்ளது.
‘சிவம்’ பஞ்ச பூதங்களாகவே உள்ளதாக ஐதீகம். பஞ்ச பூதங்களின் திரிபே இவ்வுடல். ஆகவே “மானுடராக்கை வடிவு சிவலிங்கம்” என திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி ‘உடல்’ எனும் ஒவ்வொரு மானுட யாக்கையும் சிவலிங்கமே. அதாவது ஒவ்வொரு ‘பாத்திரமும்’ பணிதற்குரிய ‘சிவம்’ எனும் பரம்பொருளே என்று உணர்ந்து அறிந்துகொண்டு பணிவீராயின்…

மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே:
‘மாத்திரை’ என்பது கால அளவை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். உடல் பிறப்பெடுத்ததிலிருந்து…இறக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட பொழுதே ‘கால அளவு எனும் மாத்திரை’ ஆகிறது.
‘மாத்திரை’ என்பது கால அளவை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். உடல் பிறப்பெடுத்ததிலிருந்து…இறக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட பொழுதே ‘கால அளவு எனும் மாத்திரை’ ஆகிறது.
இது உடலுடன் இணைந்தே இருப்பது. உடல் மறையும் போது மாத்திரையும் மறைந்துவிடும். அதாவது ‘உடலே பாத்திரம்’ எனும் மாயை விலகி பஞ்ச பூதங்களாகவே பணிதற்குரிய ‘சிவம்’ எனும் பரம்பொருளாகவே உணரப்படும் போது, கால அளவான மாயத்திரை எனும் மாத்திரைக்கும் ‘திருமாற்பேற்று இறைவனின் அருள்’ ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அதாவது ஒரு கணத்துக்குள் கிட்டி மாயத்திரை விலகி விடுகிறது.
திருச்சிற்றம்பலம்👏