You Are That! -” A True Brahmin”

திருமந்திரம் #பாடல் #226:
காயத் திரியே கருதுசா வித்திரி

ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி

நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்

மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே

#விளக்கம்:

காயம்என்பதற்குஉடம்புஎன்று பொருள் கொள்ளலாம். பஞ்ச பூதங்களின் திரிபேகாயம்எனும் உடலாக மாறியுள்ளது. ‘காயம்மீண்டும திரிந்தால் அவை பஞ்ச பூதங்களின் தன்மையாகவே இருக்கும். காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சாவித்திரி, உருவமற்ற கடவுளின் பெண் ஆற்றல்மிக்க சக்தி. அச் சக்தியை தியானிக்க இரண்டு மந்திரங்கள் சாவித்திரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவை பலா (சக்தி) மற்றும் அதிபலா ( அதீத சக்தி) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உருவமற்ற சக்திமயமான மந்திரத்தை,காயம்திரிந்து இவ்வுடம்பை பஞ்ச பூதங்களாகவே உணர்ந்த நிலையில்தான் ஜபிக்க இயலும். அவ்வாறு ஆராய்ந்து அதன் பொருளை உணர்ந்து நாள் தோறும் இடைவிடாது அந்த மந்திரத்தை நாசியில் இயங்கும் வாசியில் முறைப்படி இணைத்து தியானித்து வந்தால்….
இறையருளால்அன்பே சிவமாய் அமரவேதங்கள் சொல்லியபடியே வாழ்ந்து வருவார்கள். இத்தகையோரே அந்தணர்என்னும் சொல்லுக்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்🙏🏼

Leave a comment