You Are That! -“breath of all breath”

திருஞானசம்பந்தர் பதிகம்:

“உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை
விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர்

எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே”.


பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.

பொ-ரை விளக்கம்:
ஒரு ஜீவனின் நாசியில் இயங்கும் வாசியின் (மூச்சின்)
இயக்கத்தை வைத்தே ஜீவனில் உயிர் உள்ளதை ஊர்ஜிதம் செய்ய இயலும்.
எனவே இங்கு ‘வாசி’ என்பதே எல்லா ஜீவன்களின் உயிராக இருந்துகொண்டிருக்கிறது என்பதை அறியலாம். இறைவன்உயிருக்குள் உயிராய்’ அதாவது ‘வாசிக்குள் வாசியாக’ ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர்.
ஏனெனில் அவனை அறிய வேண்டுமெனின் ஜீவன் தன் வாசியின் வழியாகவே அவ்-வாசியை (சிவத்தை) அறிய இயலுமேயன்றி வேறு ஏதும் மார்க்கம் இல்லை. அவ்வாறு உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் சிவத்தை அறிந்தபின், அதாவது சிவம் திருவாசியாகவே மாறிய பின்பு…
அந்த இடமே சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதினை ஒவ்வொரு ஜீவனுமே தம்முள் உணரப் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment