திருமூலரின் திருமந்திரம்: 20
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே”.
பொதுவாக மானிட வர்க்கம் ‘பிறப்பு’ என்று வரும்போது, கரு உற்பத்தி தொடங்கி பிறக்கும் வரை அதன் நெறிமுறைகளை ஆராயத் தொடங்கும். ஆனால் அதே மானிட வர்க்கம் ‘இறப்பு’ என்று வரும்போது, தம் முடிவைப் பற்றி முன்னரே ஆராய்ந்து அறிந்துகொள்ள பயமே கொள்ளும்.
மரணமில்லா பெருவாழ்வு அடையப் பெற்ற சான்றோர்களின் வாழ்வை உற்று நோக்கினாள், இவர்கள் யாவருமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே தம் இறப்பைப் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் தான்.(உம்: வள்ளல் பெருமான் ரமண மகரிஷி போன்றோர்கள்)
வாஸ்தவத்தில் மரணம் ஆராயப் படாமல் இருக்கும் வரை தான் அஃது யம-பயம். ஆராயப் புகுந்தால் அஃது இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும். எங்கும் எல்லாம் ‘சிவமயமாக’ ஆகி ‘யம- பயத்தை’ அற்றுப் போகும்படி செய்துவிடும்.
இத் திருமந்திரம் ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்னும் அவ்வை பிராட்டியின் சொல்லுக்கேற்ப, பிறந்த மனிதகுலத்துக்கு சொல்லப்பட்ட குறிப்பு. எனவேதான் திருமூலர் ‘முடிவை’ முதலிலும், பின்னர் ‘பிறப்பையும்’ கூறுகிறார். அதாவது முடிவைப் பற்றி ஆராய்ந்து அதன்மூலம் யம-பயம் மறைந்து சிவமயம் ஆகின், அச் சிவனருளால் மாயப் பிறப்பு அறுபட்டு மீண்டும் பிறவாமை என்னும் பேறு கிட்டும்.
“வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம்
அறியேன் மரணபயம் தவிர்த்திடுஞ்சன்
“வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம்
அறியேன் மரணபயம் தவிர்த்திடுஞ்சன்
மார்க்கமதை அறியேன்”வள்ளலாரின் திருவருட்பா:
வள்ளலாரின் திருவருட்பா:
சாய்ராம்

