“உருவமும் அருவமும், உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)
‘உருவம்’ என்பது நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் கலவையுடன் கூடிய காணக்கூடிய தன்மை கொண்ட வடிவங்கள்.
‘அருவம்’ என்பது ஐம்பூதங்களில் ஆகாயத்தை மட்டுமே தம்முள் கொண்ட ‘வெளி’ எனப்படும் காட்சிக்கு அப்பாற்பட்ட தன்மை கொண்டது.
‘உபயம்’ என்பதற்கு ‘இரண்டு’ என்று பொருள் உள்ளது.
அதாவது ‘உருவம் அருவம்’ என்னும் இவ்விரண்டின் பொதுத்தன்மையான ஆகாயமெனும் ‘வெளி’ இஃதினில் அடங்கும். அவ்வெளிக்குள் வெளியாய் அருள் நிலையாக பிரகாசித்துக் கொண்டிருப்பது அருட்பெரும் ஜோதி.
அதாவது ‘உருவம் அருவம்’ என்னும் இவ்விரண்டின் தன்மைகளும் ‘உபயம்’ என்னும் தன்மையில் கலந்து ‘வெளிக்குள் வெளியானால்’ அங்கு அருட்பெரும் ஜோதியின் தரிசனம் வெளிப்படும்.
சாய்ராம்.

