திருவாசகம்/சிவபுராணம்-3


“ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து

தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
“ஆனா அறிவாய்” அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.”

‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள் உள்ளது.
ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா பல்லுயிர்க்கும் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ”
நீங்காத அறிவாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத அறிவாய் சதா விளங்கிக் கொண்டிருக்கும் சதாசிவத்தை உணரும் வழிதனை ‘அவனருளாலேயே அவன் தாள் வணங்கி’ அறிந்து கொண்டால்…
பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:113
அவ்வறிவு என்னும் நீங்காத சிவம் “ஊனாய் உயிராய் உணர்வாய்”
அதாவது உடம்பாய், இவ் உடம்பினுள் குடிகொண்ட உயிராய், உடம்பு உயிர் என்னும் இவ்விரண்டும் அருள்நிலையில் கலக்கப்பெற்ற உணர்வாய், அருட்பெருஞ்சோதி யாக ஒவ்வொருவர் உள்ளுமே ஒளிர்ந்து கொண்டிருப்பதை காணலாம்.

“உருவமும் அருவமும், உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)

சாய்ராம்.

Leave a comment