“எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” (141)
-தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று உள்ளது. உயிர்மெய் எழுத்து என்பது மெய்யுடன் உயிர் கலந்த எழுத்தே!
-தமிழுக்கு எழுத்து வடிவமும், சொல் வடிவமும், பொருள் வடிவமும் கிட்டுவது மெய் எழுத்துடன் உயிரெழுத்து கலந்த பின்பே!
-மெய் என்பதற்கு ‘உடல்’ என்று பொருள் உள்ளது. இம் மானுட யாக்கைக்கு தமிழைப் போன்றே ஆண், பெண் என்று சுட்டிக்காட்டும் சொல் வடிவம் கிட்டியது மெய்யுடன் உயிர் கலந்த பின்பே!
-அதுபோன்றே ஒவ்வொரு மானுட யாக்கையும் சொல் வடிவத்துடன் தமிழைப் போன்று எழுத்து வடிவமும் பொருள் வடிவமும் கலந்தே தோன்றியுள்ளது!
-ஆயினும் இவ்-எழுத்து இன்னதென்று அறியப்படாததால் இம்- மானுட யாக்கையின் பொருளும் விளங்காமலேயே போய்க்கொண்டிருக்கிறது!
-“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. குறள்:423
மெய், இம்- மானுட யாக்கையை பொருளாக காண்பதே அறிவு. அவ்வாறு இம் மெய்ப்பொருளாக காண, இதன் மெய்யெழுத்து முதலில் அறியப்பட வேண்டும்!
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. குறள்:423
மெய், இம்- மானுட யாக்கையை பொருளாக காண்பதே அறிவு. அவ்வாறு இம் மெய்ப்பொருளாக காண, இதன் மெய்யெழுத்து முதலில் அறியப்பட வேண்டும்!
-“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்”-நறுந்தொகை
இம் மெய்யெழுத்து இன்னதென்று அறிவித்தவனே இறைவன் ஆகும். மெய்யெழுத்து இன்னதென்று அறியப்படாமல் மெய்ப்பொருள் காண இயலாது. மெய்ப்பொருள் அறியாத புறவடிவம் மட்டுமே கொண்ட மானுட யாக்கைகள் யாவும், எவ்வாறு தனித்து நிற்கும் மெய்யெழுத்து எந்த பொருளையும் கொள்ளாதோ அவ்வாறே பொருள் அற்றதாய் போய்விடும்!

-அதாவது ‘ஆதியில்’ மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்தாக வந்த மானுடராக்கை யின் ‘மெய்ப்பொருள்’ அறியப்படாததினால், ‘அந்தம்’ என்று வரும் போது இம்-மெய்யை விட்டு உயிர் பிரிந்து மெய்யை பொய்யாகிவிடும்!
-மாறாக மெய்யை, எழுத்து சொல் பொருளுடன் கூடிய மெய்யெனக் கண்டவர்கள், மெய்ப்பொருளாய் விளங்கும் ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதியுடன்’ இரண்டற கலந்து விடுவார்கள்!
வாழ்க தமிழ்🙏