You Are That! – “Fearless soul”

“அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு”.
குறள்:534

பொதுப்பொருள்:
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

மெய்ப்பொருள்:
ஒவ்வொருவரின் ‘அகம் புறம்’ எல்லாம் ‘சிவமயமாகவே’ இருக்கிறது. அஃதுவே அரணாகியும் நின்று, அவரவர்தம் உள்ளத்தில் ‘பயம்’ என்பதே தோன்றாமலேயே செய்து கொண்டும் இருக்கிறது. மாறாக தன்னிடமுள்ள இச் ‘சிவமயத்தை’ மறந்தோரிடம் இருந்து வெளிப்படும் ‘தனிமயமான’ ‘நான்’ என்னும் சிந்தனை கொண்ட உள்ளத்தில் தோன்றும் அச்சத்தினை போக்கிக்கொள்ள அவர்கள்தம் புறத்தினில் எவ்வளவு பெரிய அரண் அமைத்துக் கொண்டாலும், அஃதினால் ஒரு பயனும் ஏற்படாது. எவ்வாறு ‘மறதி’ உடையவர்கள் தன்னிடத்தில் உள்ள செல்வத்தை விட்டு விட்டு வெளியில் அச்செல்வத்தை தேட முயன்றால் அவர்களிடம் உள்ளதும் விட்டுவிலகிச் செல்லுமோ, அவ்வாறே இத்தகையோரிடம் மறைந்துள்ள சிவம் விலக, சவமாய் திரிவார்கள்
என்பதாக பொருள் கொள்ளலாம்.
6/118. 30 சிவசிவ ஜோதி
“அச்சம் தவிர்த்தமெய் ஜோதி – என்னை
ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம்தந்த ஜோதி – உயிர்க்
கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ”

சாய்ராம்.

Leave a comment