“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்” என்பது வள்ளல் பெருமானின் விண்ணப்பம்,
ஒருமை: என்பதற்கு ஒரே தன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்ற தன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு என்று பல பொருள்கள் உள்ளன.
வள்ளல் பெருமான் குறிப்பிடும் ஒருமை என்பது மேலே குறிப்பிட்ட பல பொருள்களையும் உள்ளடக்கிய ஒருமை.
“அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்” (அகவல்:1570)
அருட்பெருஞ்ஜோதி என்பது ‘ஒப்பற்ற தன்மை’ கொண்டது.‘மெய்ம்மை’ என்னும் உயிர் வடிவானது. ‘வீடுபேறு’ அளிக்கக் கூடியது. இப்-பேரொளியுடன்….
வள்ளல் பெருமான் ‘மனமொருமித்த’ ‘ஒற்றுமை’ யுடன் இரண்டற்ற ‘ஒருமையெண்’ ஆக ‘இறையுணர்வு’ மிக, தனித்த ‘தனிமை’யில்’ உன்னியபடி(தியானித்த படி) இருந்து பெற்ற பெறும் பேறே மரணமிலாப் பெருவாழ்வு என்னும் மீண்டும் இறப்பில்லா ‘ஒரு பிறப்பு’.
இஃதுவே இன்றளவும் ‘ஒப்பற்ற தன்மை’ கொண்ட, ‘வீடுபேறு’ அளிக்கக் கூடிய, ‘மெய்ம்மை’ என்னும் உயிர் வடிவான அருட்பெருஞ் ஜோதியுடன் இரண்டற கலந்து ‘அன்பையும் இன்பையும்’ ஒருசேரப்பெற்று ‘ஒரே தன்மை’ கொண்ட ‘ஓர்உரு’ ஆகி அகிலமில்லாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய ‘ஒருமை’ பண்புடைய உத்தமர்களின் உறவு வேண்டும் என்பதே வள்ளல் பெருமானின் விண்ணப்பம்.
சாய்ராம்.
சாய்ராம்.

