You Are That! – “A true offering”

இனியொருப் பிறவாநிலை வேண்டுமெனில், பிறந்த இவ்வுடலை விட்டு உயிர்மீண்டும் பிரியா நிலை, அதாவது மரணமிலாப் பெருவாழ்வு அடையப்பெற்றால் தான் மீண்டும் பிறவாநிலை என்னும் பெரும் பேறு கிட்டும்.

Sage Yajnavalkya had a discussion with other rishis.

“Even if the knower of brahman’s pranaas (like any other pleasant fruit) leaves the body, he must take another birth as an ordinary man.
Q: What will happen to the knower of brahman’s pranaas then?
A: It will be absorbed into the body (much like a coconut or a banana) and will not leave the body “..
மற்ற பழங்களில் இருந்து உயிருள்ள விதைகள் வெளியே பூமியில் விழுந்து மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் தேங்காய், வாழைப்பழம் இவற்றிலிருந்து உயிருள்ள விதைகள் என்று எதையும் தனியே பிரிக்க இயலாது. அதாவது எவ்வாறு தேங்காயின் உயிர்சக்தி தேங்காய் முழுவதும் வியாபித்திருக்கிறதோ , எவ்வாறு வாழைப்பழத்தின் உயிர்சக்தி வாழைபழம் முழுவதும் வியாபித்திருக்கிறதோ
அவ்வாறே மரணமிலாப் பெருவாழ்வு அடையப்பெற்ற மகான்களின் உயிர்சக்தியும் எங்கும் வியாபித்துபடியே இருக்கும். இத்தகையோர்களே இனியொருப் பிறவாநிலை கிட்டிய நித்திய ஜீவர்களாக வாழ்ந்து கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் இருப்பார்கள்,
.ம்: திருமூலர், ராகவேந்திர சுவாமிகள்,போதேந்திராள், ஸ்ரீதர அய்யாவாள், வள்ளலார், சீரடி சாய்பாபா,சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, ஞானானந்தர், காஞ்சி மகா ஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார் போன்ற ஸத்குருமார்கள்.
இதன்பொருட்டு தான் ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் பொருள்களில் தேங்காயும், வாழைப்பழமும் முதன்மை பொருளாக இருந்துகொண்டிருக்கிறது.
சாய்ராம்

Leave a comment