You Are That! – “Ruler of all Philosophies-2”

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள்.எனினும் இத் தத்துவங்களின் மூலம்
அல்லது முடிவு என்பது ,சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள்
எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால் திரும்வெம்பாவையில் பாடப் பெற்ற முதல் பாடலான,

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியே”.

மாணிக்கவாசக சுவாமிகளின் வழித்தடத்தை பின்பற்றி வந்த வள்ளல் பெருமானும் இக்கருத்தை வலியுறுத்தியே இவ்வாறு பாடியுள்ளார்,

“தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:830

“ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”.

Ashtavakra Gita: chapter:2

As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, alternatively nothing is.

In John 8:12 Jesus applies the title to himself while debating with the Jews and states: I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life.
அதாவது ‘ஒளி’ அறியப்படும் வரைதான் தத்துவங்களும் பேதங்களும். அறிவொளியில் ஐக்கியமான பின்பு தத்துவங்களும், பேதங்களும் கூடவே மறைந்து போய்விடும். பின்பு ஒவ்வொருவருமே Ruler of all Philosophies”.
சாய்ராம்.

Leave a comment