You Are That! – “divine dictum”

“சிவலோக பிராப்தி”

“அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருளாமே”.
திருமந்திரம்: பாடல் எண் : 37

‘அவம்’ என்பதற்கு ‘ஆணை’ மற்றும் ‘கட்டளை’ (command) என்று பொருள்கள் உள்ளது. கட்டளையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியார் எதையும் அறியாதவர்களே!
அதாவது மனிதனின் ‘மூளை’ கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு இருக்கும் வரையில்தான் அவனது ‘இருப்பு’ (வாழ்வு) இவ்வுலகத்தில். எப்பொழுது மூளையில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் நின்று போகின்றனவோ, அக்கணமே அவனது உலகில் வாழ்வும் ‘Brain Death’ என சொல்லப்படும் முடிவுக்கு வந்துவிடும். அதாவது சிவத்தின் இருப்பிடம் எது? என்பது அவர்களால் அறியப்படாமலயே, ஆயினும் ஏனையோர்களால் அவர்கள் சிவலோக பிராப்தி அடைந்ததாகவே வர்ணிக்கப் படுவார்கள்!
உண்மையில் கட்டளையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறிந்தவர்கள் எல்லாம் அறிந்தவர்களே!!
‘அவமும் சிவமும்’ ஒன்றென உணரும் இத்தகைய அருளறிவு சிவத்தின் அருள் கூடினால் மட்டுமே கிட்டும். அவ்வாறு கிட்டிடின் ஒவ்வொரு கட்டளையையும் சிவமாகவே, அவனின் (ஸத்குருவின்) கட்டளையாகவே இருப்பதை அவனருளாலே உணர்வார்கள். அதாவது இவ்வாறு இருக்கும்போதே (வாழும்போதே) சிவத்தின் இருப்பிடத்தை அறிந்தவர்களே உண்மையில் சிவலோக பிராப்திக்கு செல்வதற்கு உகந்தவர்கள் ஆவார்கள்!!!
“அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே

அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே”
வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment