“எல்லாம் சிவமயம்”

‘காலம்’ என்பது ‘இருக்கு மற்றும் இல்லை’ என்னும் இவ்விரண்டு நிலைகளுக்கு உட்பட்ட ஓர் மாயத் தோற்றமே அன்றி வாஸ்துவத்தில் காலம் என்று ஒன்றே இல்லை.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”
என்று சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் பாடிய பாடலின் வரிகளை உற்று நோக்கினால்…
பஞ்சபூத சம்பந்தம் கொண்ட பற்பல ஜீவராசிகளாக உருமாறி உருமாறி இருந்து கொண்டும் பின் இல்லாமலும் போன இடைப்பட்ட வெளியான காலம் என்னும் மாய தோற்றத்தில்…
“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என்று திருவெம்பாவையில் பாடிய படி பஞ்சபூத சம்பந்தம் கொண்ட எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தாலும்…
தோற்றத்திற்கு அப்பால் கால வெளி அற்ற அதாவது போக்குவரத்து இல்லாத பூரணமாக, ஸாஷியாக, பிறப்பு இறப்பு இல்லா ஆத்ம ஸ்வரூபியாக, சிவமயமாகவே மணிவாசக பெருமான் இருந்து கொண்டு இயற்றிய சிவபுராண வரிகளாகவே இவ்வரிகள் தோன்றும்.
இதன் மூலம் ஆத்ம ஸ்வரூபமான சிவம், தாம் கொண்ட மணிவாசக பெருமான் என்னும் தோற்றம் காலத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும்…

அஃது சிவம் என்னும் ஓர் நாமமாக, பிரபஞ்சம் என்னும் ஓர் உருவாக, காலமற்றதாகவே இருந்து கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment