“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” கேள்விக்கு “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் அளித்தார் நம்மாழ்வார்.
Interpretation:
“பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி”
வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:151
இங்கு ‘சிறியது’ என்பதிற்கு ஆதியும் அந்தமும் இல்லா அனுமயமான அருட்பெருஞ்ஜோதி என்று பொருள் கொள்ளலாம். பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இருள் சூழ்ந்த அழிவுடைய உடம்பின் வயிற்றில் பிறந்த ‘சிறிதினும் சிறியதாகிய’ ஜோதி வடிவான நம்மாழ்வார் பிறந்தபின்னும்…
“பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன” என்கிறது தைத்திரியோ உபநிஷத்.
அதாவது ஒளி சக்தியே பிராண சக்தியாய் நம்மாழ்வார்க்கு அமைந்து விட்டதால்! ‘சிறிதினும் சிறியதாகிய’ அத்தையே (அவ்வொளியினையே) அவர்தம் சரீரத்திற்கு உணவாக உண்டு எங்கும் கிடப்பார்!! என்பதாக பொருள் கொள்ளலாம்.
Sufi saint Hazarth Rumi quotes:
“If everything around seems dark, look again, you may be the light.”
“If everything around seems dark, look again, you may be the light.”
சாய்ராம்.


