You Are That! – “Cow Caretaker”

“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்”. (குறள்:1066)
பொதுப்பொருள்:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும்,
இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

மெய்ப்பொருள்:
பசு தன் ரத்தத்தை பாலாக்கி உணவாக எந்தவொரு பாகுபாடின்றி ஒட்டு
மொத்த மனித குலத்திற்கும் உணவாக “இரத்தலின்றி ஈதலாக” வழங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய வாயில்லா பசு இனத்தை பராமரித்து பசுவின் நா வறண்டு போகாமல் உரிய நேரத்தில் ‘நீர்’ அளித்து காப்பது என்பது பேசும் திறன் படைத்த மனித குலத்தின் ஒட்டு மொத்த கடமையாகும்.
அவ்வாறு இருக்க அதன் வறட்சியைப் போக்க அதை ரட்சிக்கும் பொறுப்பில் இருக்கும் ஒட்டு மொத்த மனித குலத்துக்குள், பசுவிற்கு நீர் வேண்டும் என்று ஓர் மனிதன் மற்றொரு மனிதனிடம் ‘ஈதலின்றி இரந்து’ கேட்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டால்?
அத்தகைய அறமற்ற ‘இரத்தல்’ என்னும் செயலைக் காட்டிலும் இழிவான வேறு எதுவும் மனித குலத்தில் உண்டான ‘நாவிற்கு’ இல்லவே இல்லை என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.

#2/036:3 நெஞ்சைத் தேற்றல்:

“இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ”
வள்ளலாரின் திரு-அருட்பா

சாய்ராம்.

Leave a comment