You Are That! -“The breeze of the soul”

“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி”. (குறள் 324:)
அறத்துப்பால்: அதிகாரம்: கொல்லாமை

பொதுப்பொருள்:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால்,

எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
மெய்ப்பொருள்:
இங்கு வள்ளுவர் பெருமான் கூறும் கொல்லாத அறம் என்பது ஓருவர் உடம்பிலிருந்து உயிரை பிரியும் படி செய்யும் செயல் அன்று! உடம்பில் உயிர் உள்ளபோதே ‘கொல்லாமல் கொல்லும் செயலை’. அதாவது ஒருவர் உடம்பினுள் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் போதே எப்போது இவ்வுயிர் அடங்கும் என்னும் வேதனையோடு வாழும் சூழ்நிலைக்கு அத்தகையவர் தள்ளப்படின், அஃதுவே ‘கொல்லாமல் கொல்லும்’ பாதகச் செயலாகும்.

ஆகவே ஒருவர் உயிரோடு இருக்கும் போதே உயிரைக் கொல்லும் இத்தகைய பாதகச் செயலை ஒருபோதும் செய்யாமல் இருப்பதே, கொல்லாத அறத்தைப் போற்றும்நல்ல வழி’ என்று அறநூல்களால் சொல்லப்படும் ‘நன்னெறி யாகும்’ என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.

#1/003:650:வள்ளல் பெருமான் பாடல்“கொல்லா விரதமது கொள்ளாரைக் கானிலொரு
புல்லாக எண்ணிப் புறம்பொழிக எல்லாமும்”

அருட்பெருஞ்ஜோதி அகவல்:968
“கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே”
சாய்ராம்.

Leave a comment