ஈசாவாஸ்யோபநிஷத்து ॥12॥,॥13॥,॥14॥
12. எவர்கள் ‘அஸம்பூதி’ யை உபாசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகின்றனர்: எவர்கள் ‘ஸம்பூதி’ யில் ஆசை வைத்தார்களோ அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றவர்கள் போல்வர்.
13. ‘ஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு, ‘அஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு என்று நமக்கு உண்மையை விளக்கிய தீரர்களிடமிருந்து நாம் கேட்டிருக்கிறோம்.
14. எவன் அஸம்பூதியையும் ஸம்பூதியையும், இரண்டையும் ஒன்றாகக்கூட்டி அறிகிறானோ அவன் ஸம்பூதியால் சாவைத் தாண்டி, அஸம்பூதியால் சாகாத்தன்மையை எய்துகிறான்.
‘அஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகாத உயிர் (அல்லது) ஆத்மா. ‘ஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகும் மெய் (அல்லது) உடம்பு. எவர்கள் உருவமற்ற உயிரில் ஆசை கொள்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகின்றனர்:எவர்கள் உருவுடைய தேகத்தின் மீது மட்டும் ஆசை கொள்கிறார்களோ அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றனர்:
அதாவது மெய்யால்(உடம்பால்) பெறப்படுவது வேறு, உயிரால் (ஆத்மாவால்) பெறப்படுவது வேறு. ஆகையால் எவன் இவ்விரண்டையும் ஒன்றாகக்கூட்டி அறிகிறானோ ?
ஒன்றாகக்கூட்டி அறிதல் என்பது, எவ்வாறு இரு மெய் எழுத்துக்கள் ஒன்றாகக்கூடாதோ, இரு உயிர் எழுத்துக்கள் ஒன்றாகக்கூடாதோ, ஆனால் மெய்யுடன் உயிர் எழுத்து ஒன்றாகக்கூடி உயிர்மெய் எழுத்தாக உருமாறுமோ அவ்வாறே….
ஓர் மெய்யால் (தேகத்தால்) மற்றொரு மெய்யை( தேகத்தை) அறியாமல் (அல்லது) ஓர் உயிரால்(ஆத்மாவால்) மற்றொரு உயிரை(ஆத்மாவை) அறியாமல், தம் உயிரால் தம்மெய் யையை அறிந்தால், மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்தாக ஜோதி வடிவாக உருமாறும். அதாவது சாவைத் தாண்டி சாகாத்தன்மையை எய்தி மரணமில்லாப் பெறுவாழ்வை பெறலாம் அருட்பரகாச வள்ளலாரை போல் !
சாய்ராம்.


