You Are That! – “Decentralized person”

“ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:(1537)

உண்மையில் ‘ஆதி மற்றும் அந்தம்’ என்பது இல்லாத ஒன்றே !

‘நடு’ என்பது ‘நான்’ என்னும் அகங்காரத்தை குறிப்பிடுவது.
‘நான்’ என்னும் அகங்காரம் உள்ளவரை, அதற்கு முன் ஆதி என்றும் பின் அந்தம் என்றும் உள்ளது போன்ற ஓர்நிலை சதா தோன்றிக்கொண்டே இருக்கும்.

உறக்க நிலையில் ‘நான்’ என்னும் அகங்காரம் வெளிப்படாமல் போய்விடுவதால், அந்நிலையில் ஆதி, அந்தம் என்பதும் தோன்றா நிலையாகவே இருக்கிறது, எனினும் ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த அவ்-உறக்க நிலையில் ஜோதியின்
வெளிப்பாட்டை உணர இயலாது.
மாறாக விழிப்பு நிலையில் ‘நான்’ என்னும் அகங்காரம் மறைந்து போய் மெய்மறந்த நிலை கிட்டினால், ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த நிலை உருவாகி, வள்ளல் பெருமானை போல் ஜோதியாய் உள்ளம் சூழ்ந்த உள்ளுணர்வை விழிப்பு, கனவு, உறக்கம் எனும் எல்லா நிலைகளிலும் பெற்று பேரின்பம் எய்தலாம்!

“When there is no me that is liberation, and when there is me there is bondage.
Consider this carefully, and neither hold on nor reject”.
Ashtavakra Gita : Chapter:8
சாய்ராம்.

Leave a comment