You Are That! – “Uneatable”

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்”.
அறத்துப்பால்: புலான்மறுத்தல்: குறள் 258:
பொதுபொருள்:
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

மெய்ப்பொருள்:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

– குறள்: 340
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். அதாவது ஓர் நிலையான இருப்பிடம் கிடைக்காத உயிரானது மனித உடம்பை விட்டு விலகியபின், வேறு ஒரு விலங்கின உடம்பில் குடிபுகுந்தால்? அவ்- விலங்கினம் தலைபிரிந்து உயிர் நீங்கிய இறைச்சியாக மனிதர்களால் உண்ணப்படும் !
மாறாக, ‘எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்னும் பழமொழிக்கு ஏற்பவும்…
“நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு”.

அவ்வை குறள் 238:

என்று அவ்வை தம் குறளில் கூறியுள்ளபடியும்…
உடம்பிற்கு பிரதானமான சிரசில் உள்ள நெற்றியில் நிறைந்த வொளிகாணில்? இவ்வுடம்பை முற்றிலும் அழியாத உடம்பாக்கி, இவ்வுயிருக்கும் ஓர் நிலையான இருப்பிடத்தை அளிக்கலாம். இத்தகையோரே தலைபிரிந்து உயிர் நீங்கிய விலங்கின இறைச்சியாக , மனிதர்களால் உணவாக ஒருபோதும் உண்ணப்பட இயலாதவர்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்.

Leave a comment