“தெருள்நிலைஇது எனத்தெருட்டி என்னுளத்திருந்து அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:321)
தெருள்நிலை: என்பதிற்கு ‘அறிவின்தெளிவு நிலை’ என்று பொருள்.
தெருட்டி: என்பதிற்கு ‘அறிவித்தல்’ என்று பொருள்.
எவரொருவரும் தம் பெற்ற அறிவின் தெளிவு நிலையினை ‘எழுத்து, சொல் மற்றும் செயல் வடிவு’ மூலமாக புற உலகுக்கு வெளிப்படுத்தியே, தம் பெற்ற அறிவின்தெளிவு நிலைக்கு ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள இயலும்.
ஆனால் இங்கு வள்ளல் பெருமானின் அறிவுக்கு அறிவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி, வள்ளல் பெருமான் தாம்பெற்ற அறிவின் தெளிவு நிலைக்கு அங்கீகாரத்தை பெற புறஉலக வழிகளை நாடிச் செல்லாவண்ணம்…


