You Are That! – “Non-stop runner”

“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து”.(குறள்:496)

பொதுப்பொருள்:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

மெய்ப்பொருள்:
வள்ளுவர் பெருமான் இங்கு கப்பல், தேர் என்னும் இரண்டையுமே ஏன் உவமானப் பொருளாகவே கையாண்டுள்ளார் ?

நாம் வாழும் இந்த பூமி முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தாலும் சூழ்ந்து உள்ளது. அதே போல் ஒவ்வொரு மனித உடலும் முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தின் தன்மையையும் கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டு பகுதிகளாக உடைய இத் தேகத்தில், ஓடிக்கொண்டே இருப்பது உள்மூச்சு, வெளிமூச்சு என்னும் பிராண, அபாண வாயுக்களே !
பகவத்கீதை: ஞானகர்மஸந்யாஸ யோகம் அத்தியாயம் -4:29
அபான வாயுவில் பிராணனையும், பிராண வாயுவில் அபானனையும் ஆகுதி செய்பவர்கள், பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து பிராணா யாமத்தில் ஈடுபடுகின்றனர்.

அதாவது வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது என்னும் உவமானப் பொருளுக்கேற்ப, பூமியின் அம்சமாகவே இருக்கும் இத்தேகத்தின் உள்ளே ஓடும் நீரினில் அபான வாயுவும்…
கடலில் ஓடுகின்ற கப்பல்கள் நிலத்தில் ஓடமுடியாது என்னும் உவமானப் பொருளுக்கேற்ப, நிலத்தின் தன்மை கொண்ட புறப்பகுதியில் பிராண வாயுவும் மாறி மாறி ஒடிக்கொண்டு இருக்கிறது…
அவ்வாறு ஓடினால், எவ்வாறு வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுயன்றால் மூழ்கி விடுமோ ! அல்லது, கடலில் ஓடுகின்ற கப்பல்கள் நிலத்தில் ஓடமுயன்றால் தரைத்தட்டி நின்று விடுமோ!! அவ்வாறே நிகழும் முறையாக உபயோகிக்கப்படாத பிராண, அபாண வாயுக்களுக்கும் !!!
பகவத்கீதை: ஞானகர்மஸந்யாஸ யோகம் அத்தியாயம் -4:30
முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனைப் படைக்கின்றனர்.

அதாவது முறையாக கடலில் ஓடும் கப்பல் கடலிலும், நிலத்தில் ஓடும் தேர் நிலத்திலுமே ஓடினால் எவ்வாறு நில்லாது ஓடிக்கொண்டே இருக்குமோ, அவ்வாறே முறையாக பிரயோகிக்கப் படும் பிராண,அபாண வாயுக்களும் இத்தேகத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் என்னும் உவமேயப் பொருளை விளக்கவே, இக்குறளை வள்ளுவர் உலகிற்கு ஈந்துள்ளார்.

சாய்ராம்.

Leave a comment