You Are That! – “Mighty person”

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல.
இல்லாகித் தோன்றாக் கெடும்”.

குறள் 479:பொருட்பால்: வலியறிதல்:


பொதுப்பொருள்:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்)
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
மெய்ப்பொருள்:
‘மாயை’ என்பது இல்லாததை இருப்பது போல தோன்ற வைத்துக் கெடுப்பதே ஆகும். ‘அளவு’ என்பதிற்கு ‘ஞானம் மற்றும் தன்மை’ என்று பொருள்கள் உள்ளது.

‘ஞானம்’ உள்ளவர்கள் இம் மாயையின் தன்மையை ஆராய்ந்தறிந்து அஃதினில் சிக்காமல், தம் வாழ்க்கை முறையை வேறாக மாற்றி அமைத்து கொண்டு நிம்மதியுடன் வாழ்வார்கள்.
ஆனால் ‘ஞானம்’ அற்றவர்களை இம் மாயவலை தம்முள் சிக்க வைத்து, அதன் தன்மை கொண்டதாகவே மாற்றி, தொடக்கத்தில் எல்லாம் உள்ளது போன்று காண்பித்து, முடிவில் ஏதும் அற்றவராய் ஆக்கி மறையும் படி செய்துவிடும்.
இக் கருத்தை வலியுறுத்தியே வள்ளல் பெருமானும் தம் அகவலில்,
“தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:833) என்று பாடியுள்ளார்.

சாய்ராம்.

Leave a comment