You Are That! – “Fearless Explicit”

“எச்சம் நினைக்கிலை எல்லாம் பெறுகஎன்று.
அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி”. (அகவல்:233)

‘எச்சம்’ என்பது ஒன்றை ‘சொல்லி மற்றொன்றை மறைப்பது’ அல்லது ‘ஒன்றை கொடுத்து மற்றொன்றை இல்லை’ என்றும் பகர்வது. ‘அச்சம்’ பொருட்டு இத்தகைய ‘எச்சம்’ என்னும் தன்மை ஒவ்வொரு மனித உள்ளத்துடன் கலந்தே உள்ளதால், எவர் ஒருவராலும் எவரொருவருடனும் இணைவது என்பது இயலவே இயலாத ஒன்று.
ஆனால் இங்குஎச்சம்’ என்னும் தன்மை நினைவிலேயே ஒருபோதும் இல்லாமல், வள்ளல் பெருமானுடன் ‘இசைந்த’ அருட்பெருஞ்ஜோதியிடம் உள்ள அனைத்தும்
இயல்பாகவே வள்ளல் பெருமானை சென்றடைந்ததின் காரணம், ‘அச்சம்’ என்னும் குணம் வள்ளல் பெருமானை அடையும் வழியின்றி தவிர்த்து விட்டது.
அதாவது ‘எச்சமும் அச்சமும்’ பிரிக்கவே முடியாத தன்மை கொண்டது. ஆகவேதான் இத்தன்மையுடன் இருக்கும் இருஉள்ளங்கள் இணைவது என்பது இயலவே இயலாத ஒன்றாய் இருந்து கொண்டிருக்கிறது…மாறாக எங்கு இருஉள்ளங்கள் ஓர் இசையால் பொருந்தியுள்ளதோ அஃதினில் ‘எச்சமும் அச்சமும்’ குடிபுக வழியின்றி மறைந்தே போய் விடும் !

வள்ளல் பெருமானின் திருஅருட்பா: மெய்யருள் வியப்பு
“எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.
இந்த பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ”.
சாய்ராம்.

Leave a comment