You Are That! -” Persevering to the end”

பைபிள்:மாற்கு 13:13
“என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்”.

எவ்வாறு இறைவன் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்?
எது இறைவனின் நாமமாக உள்ளது?

பைபிள்: 2 கொரிந்தியர் 1:19

“தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ‘ஆம் என்றும், இல்லை’ என்றும் இல்லாமல், ‘ஆம்’ என்றே இருக்கிறார்”.

அதாவது தாம் ‘ஆம்’ என்று இருப்போர்கள் ‘இல்லை’ என்னும் உலகத்தவர்களின் நடைமுறைக்கு மாறாகவே இருப்பதால் ! அவர்கள் என்றென்றும் வெறுக்கப்பட்ட மனிதர்களாகவே உலகத்தவருக்கு இருப்பார்கள். எனினும் உலகத்தவரின் பகைமையை ஒரு பொருட்டெனக்கொள்ளது !

(பைபிளில், யாத்திராகமம்: 3 அதிகாரத்தில் சொல்லிய படி,

13. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய்,

உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று
அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

14. அதற்குத் தேவன்: ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று மோசேயுடனே சொல்லி, “இருக்கிறேன்” என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.)

ஆம் என்றே இருக்கிறார்” என்னும் தேவனின் நாமத்துடனேயே முடிவுபரியந்தம் (மரணம் வரையில்) நிலைத்து நின்றால்? அத்தகையோர் மட்டுமே தேவனால் இரட்சிக்கப்படுவார்கள்! அதாவது தேவனின் நாமத்துடன் தாமும் ஐக்கியமாகி “ஆம்” என்றே ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்றே இருப்பார்கள்!!
அஃதின்றி ‘இல்லை’ என்னும் நாமத்துடன் உள்ள உலகத்தவர்களின் ‘பகைமைக்கு’ பயந்து, ஆசை வயப்பட்டு அவர்களோடு தாமும் ‘இல்லை’ என்னும் நாமத்துக்குரியவாராய் மீண்டும் மாறிப்போயின், முடிவுபரியந்தம் வரும்போது தேவனுடைய நாமம் இரட்சிக்காது!!!


சாய்ராம்.

Leave a comment